Passing away of our Great Visionary

Tribute to Amma - Date of Demise October 10 2020​

மலரும் நினைவுகள்

ஓர் ஆலமரம் ஓர்ஆலமரத்தை உருவாக்கி சரிந்தது


நாங்கள் இன்று எங்கள் சாவித்திரி என்ற மாபெரும்தலைவியை இழந்தோம்


ஒரு சமயம் எங்கள் மாதாந்தரக் கூட்டத்தில் மிஸஸ் கிளப் வாலாசாதவ் அவர்களை முக்கிய விருந்தினராக அழைத்திருந்தோம்


எங்கள் சங்கம் என்பது குடுப்பத்தலைவிகளால் நடத்தப்பட்டு வந்தது.


அவர் உரையாடலில் எங்களை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு திட்டங்கள் கூறி செயலாற்றமுனையுங்கள் என்று அறிவுரை செய்தார்


1) குழந்தைகள் காப்பகம்


2) ஆதரவற்ற முதியோர் இல்லம்


இரண்டாவது திட்டம் எங்கள்மனதில் ஆழமாகப் பதிய எங்கள் சங்க அங்கத்தினர்களும் ஆதரவளிக்கவே முதலில் குரோம்பெட்டில் ஒருவாடகை வீட்டில் துவங்கினோம்


அப்பொழுது பாலவாக்கத்தில்  2 ஏக்கர் நிலம் இருக்கும் தகவல்கிடைத்தது. உடனே தாமதிக்காமல் எங்கள் உறுப்பினர் பத்மாகுமரனின் மாமியார் திருமதி ராஜேஸ்வரி அம்மாள் அவர்கள் அதற்கு ஆகும் தொகைக்கு காசோலை கொடுத்துவிட்டார். எங்கள் மற்றொரு உருப்பினர் சாந்தா செட்டி அவர்கள் கணவர் திருஜி.கே.ஷெட்டி அவர்கள் வரைபடமுடன் கட்டிடம் கட்ட முன்வந்தார். நாங்கள்  30 அங்கத்தினர்கள் ஒரு பேருந்து ஏற்பாடு செய்து காஞ்சிபுரத்திற்கு மஹாஸ்வாமிகள் தரிசிக்கச் சென்றோம். எங்கள்


திட்டத்தைத் தலைவி விவரிக்க நாங்கள் எடுத்துச் சென்ற கட்டிட வரைபடமும் அவர் முன் சமர்ப்பித்தோம். எல்லோரையும் ஒரு முறை தன்  தீஷிண்யபார்வை செலுத்தினார்.


“நீங்கள் செய்யப்போவது சிறந்ததொண்டு” யெனத் திருவாயால் கூறியபடி திருக்கரங்களால் அக்ஷதையும் குங்குமமும் சேர்த்து அந்த வரைபடந்தின் மீது தூவி எங்களை மனமார ஆசீர்வதித்தார்.  அன்று ஆரம்பமான எங்கள் திட்டம் பலருடைய நன்கொடைகளாலும்,  அங்கத்தினர்களின் அயராத உழைப்பாலும், திருமதி சாவித்ரி அவர்கள் எங்களை வழிகாட்டி நடத்திச் சென்றதாலும் இன்று ஓங்கிய ஒரு ஆலமரமாகத் திகழ்ந்து நிற்கிறது


எங்கள் நினைவில் அழியா வாசம் செய்யும் எங்கள் அன்பு தலைவி ஸாவித்ரி அவர்களின் ஆத்மாசாந்தி அடையட்டும்


Annayar Dinam at Vishranthi

Tribute and homage to our Amma Ms.Vaithi by various Organizations, Trusts and people around the world